“கிட்னியை வித்து தான் தங்கச்சி கல்யாணம் பண்ணனும்”.. சினிமா மாதிரியே நிஜத்திலேயும் இப்டி ஒரு அண்ணனா?
தங்கைக்கு திருமணம் செய்து வைக்க உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு அண்ணன் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர்: ஆந்திராவில் தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தன் உடல் உறுப்புகளை விற்பனை செய்ய இளைஞர் ஒருவர் அனுமதி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவையாக, 'இனி கிட்னியை வித்துத்தான் கல்யாணம் பண்ணனும்’ எனச் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் நிஜமாகவே தங்கையில் திருமணத்திற்காக தன் உடல் உறுப்புகளை விற்பனை செய்ய இளைஞர் ஒருவர் முடிவெடுத்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியைச் சேர்ந்த இளைஞர் பாவா ஜான். பெற்றோரை இழந்த இவர் தனது தங்கையும் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் திருமண வயதை எட்டிய தன் தங்கைக்கு ஊர் மெச்ச திருமணம் செய்து வைக்க விரும்பியுள்ளார் பாவா ஜான்.
ஆனால், அதற்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை. எனவே அதிரடியாக தனது உடல் உறுப்புகளை விற்று தங்கைக்கு திருமணம் செய்து வைப்பது என அவர் முடிவெடுத்தார். இதனை சட்டப்படி செய்ய நினைத்த பாவா ஜான், மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட துணை ஆட்சியர் கீர்த்தியிடம் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
இதனைக் கேட்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்த துணை ஆட்சியர் கீர்த்தி, பாவா ஜானுக்கு உரிய அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமூகவலைதளங்களில், 'இப்படி ஒரு அண்ணனா?’ என நெட்டிசன்கள் ஒருபுறம் நெகிழ்ந்தாலும், 'இதெல்லாம் டூ மச்..’ என கிண்டலடித்தும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications