கல்பர்கி உள்ளிட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கொலையில் சோட்டா ராஜனுக்கு தொடர்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவிந்த் பன்சாரே, கல்பர்கி, தபோல்கர் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் சோட்டா ராஜனின் உத்தரவின்பேரில் அரங்கேறியிருக்கலாம் என புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிமுடன் இணைந்து நிழலுலக தாதாவாக உருவானவர் சோட்டா ராஜன். பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்குவதற்காக, 1993ம் ஆண்டு மும்பையில் தாவூத்தால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் கசப்பு ஏற்பட்டு, தாவூத்தை விட்டு பிரிந்து எதிர் கோஷ்டியாக உருவெடுத்தவர் சோட்டா ராஜன்.

Chota Rajan link to writters murders?

தாவூத் வலதுசாரி முஸ்லிம் அமைப்புகளுடனும், சோட்டா ராஜன், வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளுடனும் நெருக்கம் காட்ட ஆரம்பித்ததாக உளவுத்துறை கூறுகிறது. இந்நிலையில்தான், சமீபகாலமாக, இந்துத்துவாவுக்கு எதிராக எழுதியும், பிரச்சாரம் செய்தும் வந்த எழுத்தாளர்கள் சிலர் கொலை செய்யப்பட்டனர். இதில் கோவாவை சேர்ந்த சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது.

அந்த அமைப்பை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முற்போக்கு எழுத்தாளர்களான கல்பர்கி, கோவிந்த் பன்சாரே, தபோல்கர் போன்றோர் கொலையில் ஒரே குழு திட்டமிட்டு இயங்கியிருப்பது தெரியவந்தது. அந்த குழுவின் தலைமை வெளிநாட்டில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளதும் தெரியவந்தது. இக்கொலைகளின் மூல காரணம் சோட்டா ராஜன்தான் என்றும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

கல்பர்கி சுட்டுக் கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்தே, இது பயிற்சியில்லாத கூலிப்படையினரால் செய்யக்கூடிய கொலையில்லை என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்திருந்தது. ஏனெனில், துப்பாக்கியால் சரியாக குறி வைத்து சுடும் சாமர்த்தியம், நிழலுலக தாதாக்களின் ஆட்களுக்கே உள்ளது.

இந்நிலையில்தான், சோட்டா ராஜனை சுற்றிவளைக்க தீவிர திட்டமிட்டு, இன்டர்போலுக்கு இந்திய அரசு நெருக்கடி தர ஆரம்பித்தது. அதன்படி சோட்டா ராஜன் தற்போது இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இனிமேல், முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஆபத்து குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+