"மதுவை ஒழியுங்கள்... பால் குடியுங்கள்”- வித்தியாசமாக புத்தாண்டு கொண்டாடிய மகாராஷ்டிரா
மும்பை: மும்பையில் மதுவுக்கு பதிலாக பால் பருகுவோம் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் புத்தாண்டை வித்தியாசமாக வரவேற்று கொண்டாடினர் மகாராஷ்டிர மாநில மக்கள்.
புத்தாண்டை கொண்டாடும் குடிமகன்களுக்கு வசதியாக இன்று அதிகாலை வரை மதுபார்களை திறந்துவைக்க மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. நேற்றிரவு குடிபோதையில் வாகனங்களை ஓட்டிவந்த 500க்கும் அதிகமானவர்களை மடக்கிப் பிடித்த போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

தானே பகுதியில் மிதமிஞ்சிய போதையில் இருந்த ஒருவர், தனது மோட்டார் சைக்கிளை திடீரென தீயிட்டு எரித்தார். இதனால், அருகாமையில் இருந்த மேலும் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் சங்லி, புல்தானா உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் மதுஒழிப்பு இயக்கத்தினர் புத்தாண்டை சற்று வித்தியாசமான முறையில் வரவேற்றனர். "மதுவை மறப்போம், மதுவுக்கு பதில் பாலைப் பருகுவோம்" என்ற பேனர்கள் இப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications