சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. தமிழக அளவில் மாணவி சரண்யா ஹரி சாதனை !
டெல்லி: 2015ம் ஆண்டுக்கான சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழக அளவில் சரண்யா ஹரி முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பிரதான தேர்வு எழுதினர்.
இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், இந்தியா முழுவதும் 1078 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் டெல்லியைச் சேர்ந்த டினா டாபி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் அத்தர் அமீர் உல் ஷபீர் கான் 2-வது இடம் பிடித்துள்ளார்.
தமிழக அளவில் சரண்யா ஹரி முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 7வது இடத்தையும் பிடித்துள்ளார். ஐஏஎஸ் (180 பேர்), ஐஎஃப்எஸ் (45 பேர்), ஐபிஎஸ் (150) மற்றும் குரூப் ஏ (728) மற்றும் குரூப் பி (61) என யுபிஎஸ்சி தேர்வில் 1078 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அப்போது மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி (upsc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications