பறந்த சேர்கள்.. பாய்ந்த முன்னாள் இந்நாள் பாஜக நிர்வாகிகள்! ஜார்கண்டில் கலவரமான சாத் பூஜை
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் மற்றும் ஜெம்ஷெட்பூர் தொகுதி எம்.எம்.ஏ சர்யு ராய் ஆகியோரது தொண்டர்களிடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சித்கோரா மாவட்டத்தின் முக்கிய நகரான ஜெம்ஷெட்பூரில் அமைந்து இருக்கும் சூர்யா மந்திரில் சாத் பூஜை எனப்படும் சூரிய திருவிழா நடைபெற்று இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற இந்த சாத் பூஜை திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு திருவிழாவை கொண்டாடி உள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும் மாநில பாஜக தலைவருமான ரகுபர் தாஸின் ஆதரவாளர்கள் மற்றும் ஜெம்ஷெட்பூர் சுயேட்சை எம்.எல்.ஏ சர்யு ராயின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக இந்த விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.

எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் முகாம்
இந்த விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு உதவும் வகையில் எம்.எல்.ஏ சர்யு ராயின் ஆதரவாளர்கள் அங்கு கூடாரம் போட்டு முகாம் அமைத்து இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸின் ஆதரவாளர்களுக்கு இடம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

கைகலப்பு
உடனே ரகுபர் தாஸின் ஆதரவாளர்கள் முகாமை அகற்றுமாறு சர்யு ராயின் ஆதரவாளர்களிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால், அதற்கு சர்யு ராய் ஆதரவாளர்கள் மறுத்து இருக்கின்றனர். இதன் காரணமாக இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

பறந்த நாற்காலிகள்
பாஜக முன்னாள் இந்நாள் தலைவர்களின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சர்யு ராயின் ஆதரவாளர்கள் அமைத்திருந்த முகாமின் கூடாரத்தை ரகுபர் தாஸின் ஆதரவாளர்கள் தாக்கி கீழே தள்ளினர். மேலும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர்.

கலவரமான சாத் பூஜை
மறுபக்கம் கட்டைகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர். இரு பிரிவினர் மோதல் காரணமாக சாத் பூஜை திருவிழா கலவரமயமாகி சோகத்தில் முடிந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக ரகுபர் தாஸின் ஆதரவாளர்கள் மீது சர்யு ராயின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

5 பேர் காயம்
இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். அவர்கள் ஜெம்ஷெட்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மீண்டும் இந்த பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பழைய பகை
இதற்கிடையே எம்.எல்.ஏ. சர்யு ராயின் ஆதரவாளர்கள், சாத் பூஜைக்காக வந்த பக்தர்கள் இரவு தங்கி செல்வதற்காக முகாம் அமைத்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், அவர்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகிய சர்யு ராய், சுயேட்சையாக போட்டியிட்ட ரகுபர் தாஸை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications