அரவை கூலி ரூ4 விவகாரம்.. ஜாதி மோதலாகி துப்பாக்கிச் சூடாக வெடித்தது! இரு தலித்துகள் பலி!!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையேயான மோதல் வெடித்து துப்பாக்கிச் சூடு வரை சென்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ளது மொகிந்த்பூர் கிராமம். இங்கு உயர் சாதி வகுப்பினரும். தலித்துகளும் வசிக்கிறார்கள். உயர் சாதி வகுப்பினருக்கு சொந்தமான மாவு மில்லில் தலித் ஒருவர் கோதுமை மாவு அரைப்பதற்காக சென்றார்.
அதற்கு அரவை கூலி ரூ.4 கொடுப்பது தொடர்பாக தலித்துக்கும், மில் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இருவருக்கும் ஆதரவாக அவர்களைச் சார்ந்த வகுப்பினர் வந்து மோதலில் ஈடுபட்டார்கள்.
இது வன்முறையாக வெடித்தது. இதில் மாவுமில் உரிமையாளரின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து தீ வைப்பு சம்பவங்களும் நடந்தேறின. பின்னர் மோதல் நிகழ்ந்த கிராமத்துக்கு சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய 4 பேரை கைது செய்தனர்.
இந்த மோதல் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications