இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி 4 பேரால் சீரழிப்பு
பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது கண்ணமங்களா. அந்த கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இசை நிகழ்ச்சியை பார்க்க பக்கத்து கிராமத்திற்கு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நான்கு பேர் அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து அதை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த அரை மணிநேரம் கழித்து அந்த வழியாக சென்ற ஒருவர் மாணவி மயக்க நிலையில், அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதை பார்த்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
மயக்கம் தெளிந்த மாணவி தன்னை சீரழித்தவர்களில் 2 பேரை தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications