ஃபேஸ்புக் மூலம் பழகிய 10ம் வகுப்பு மாணவியை சீரழித்து வீடியோ எடுத்த போலீஸ்காரர் மகன்
காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான 10ம் வகுப்பு மாணவியை போலீஸ்காரரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் கோவிந்தபுரத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் சிகானி கேட் பகுதியில் பணியாற்றி வருகிறார். அவரது மகனுக்கும் சிகானி கேட் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக அவர்கள் ஃபேஸ்புக் மூலம் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் போலீஸ்காரரின் மகன் அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த மாணவிக்கு அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவும்
எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காட்டி இதை இன்டர்நெட்டில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி பல முறை மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
வீடியோ வெளியானால் விபரீதம் ஏற்படும் என்று அஞ்சிய மாணவி போலீஸ்காரரின் மகன் அழைத்தபோது எல்லாம் பயத்தில் சென்றுள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாணவி இறுதியில் இது குறித்து கடந்த புதன்கிழமை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அவரது பெற்றோர் நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications