அஸ்ஸாம் : 5ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக்கொலை - மூவர் கைது
அஸ்ஸாம் மாநிலத்தில் 10 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துள்ளனர்.
திஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நாகன் மாவட்டத்தில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 5 பேர்
கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்தார்.
10 வயதான அந்த சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 5 கொடூர மிருகங்கள் அந்த சிறுமியை வேட்டையாடியுள்ளனர்.

இந்த விஷயம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த சிறுமி மீது மண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
ஆபத்தான நிலையிலும் தனது நிலைமைக்கு காரணமான 4 குற்றவாளிகள் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பெயர் ஜாகிர், ஹுசேன், ராகுல், அம்தாதுல் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 2 பேர் 10, 11 வயதுடைய சிறுவர்கள் என்பதுதான் கொடுமை.
இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் அறிந்த ஜாகிர் ஹுசைன் தலைமறைவாகிவிட்டான். தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில்
குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புகொண்டனர்.
பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாகவும், ஜாகீர், உசேன் இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுவர்கள் அப்போது அவனுடன் இணைந்து கொண்டதாகவும் பின்னர் தீவைத்தாகவும் கூறினர். முன்விரோதம் காரணமாக இந்த பலாத்காரம் கொலை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.
அசாம் மாநிலத்தில் மட்டும் கடந்தாண்டு 3009 பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும். பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை தொடர்பாக 106 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திர மோகன் பட்டோவரி தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாகோன் மாவட்டம் சபார்முக் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 35 வயது பெண் ஒருவர், அவரது கணவன் கண் முன்னே 8 நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications