உட்காரும் கோணிப்பைக்கு சண்டை – பீகாரில் 1ம் வகுப்பு மாணவி பரிதாப பலி
மோத்ஹரி: பீகாரில் வகுப்பறையில் நடைபெற்ற சண்டையில் 1 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சம்பரன் மாவட்டத்தின் ராம்பூர் டோலாவில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் அமர பெஞ்ச், டெஸ்க் என்று உட்கார எந்த வசதியும் கிடையாது.
வெறும் சாக்குப்பை மட்டுமே. அதுவும் குறைந்த அளவிலே இருப்பதால் அதில் உட்காருவதற்கு சின்னஞ்சிறு குழந்தைகள் போட்டுபோடுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று முன்தினம் இதுபோல் சாக்குப்பையில் அமர்வதற்காக நடந்த சண்டையின் போது 1 ஆம் வகுப்பு படிக்கும் சீதாவை சக குழந்தைகள் 2 பேர் அடித்து கீழே தள்ளியுள்ளனர்.
இதனால் அழுது கொண்டே இருந்த சீதா பள்ளி முடிந்தவுடன் அதே பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் தன் அக்காவிடம் இந்த சம்பவத்தை சொல்லியபடியே வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது, ஏற்கனவே தாக்கிய 2 மாணவிகளும், சகோதரிகளை இடைமறித்து சாலையில் வைத்து வெறித்தனமாக தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த அந்த இருவரின் தாய்மார்களும் தன் மகள் போடும் சண்டையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர்.
இந்த வெறிச்செயலால் மயக்கமடைந்த சகோதரிகள் இருவரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சீதா பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய அக்காவின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் தாக்கிய மாணவிகள், அவர்களின் தாய்மார்கள், மற்றும் சம்பவத்தின் போது வகுப்பறையில் இருந்தும் குழந்தைகளுக்கிடையே நடந்த சண்டையை கண்டுகொள்ளாத ஆசிரியர் என ஐந்து பேருக்கு எதிராக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெறும் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் இந்த வெறிச்செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications