For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை கூட்டி சுத்தம் செய்ய துடைப்பத்துடன் கிளம்பிய அமைச்சர்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மோடியின் சுத்தமான இந்தியா பிரச்சாரத்தையொட்டி மத்திய அமைச்சர்கள் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி ஸ்வச் பாரத் அபியான் என்ற சுத்தமான இந்தியா பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

திட்டத்தை அறிமுகப்படுத்தி மோடியே துடைப்பத்தால் சுத்தம் செய்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் ஏற்கனவே துடைப்பத்தை கையில் எடுத்துவிட்டனர்.

ஜிதேந்திர சிங்

ஜிதேந்திர சிங்

இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள இடத்தை சுத்தப்படுத்தும் காட்சி.

பாஸ்வான்

பாஸ்வான்

மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இந்திய உணவு கார்பரேஷன் அலுவலகத்திற்கு வெளியே கூட்டி சுத்தம் செய்தார்.

உமா பாரதி

உமா பாரதி

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி டெல்லியில் உள்ள ஸ்ரீராம் சக்தி பவனுக்கு வெளியே சுத்தம் செய்தார்.

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சாஸ்திரி பவன் வெளியே உள்ள இடத்தை சுத்தம் செய்தார்.

கல்ராஜ் மிஸ்ரா

கல்ராஜ் மிஸ்ரா

மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா துடைப்பத்தால் அலுவலகத்தை சுத்தம் செய்தார்.

ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் பள்ளி மைதானத்தை சுத்தம் செய்தார்.

நாயக்

நாயக்

இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் செங்கோட்டைக்கு வெளியே சுத்தம் செய்தார்.

English summary
As part of 'Swach Bharat Abhiyaan' or 'Clean India' campaign, central ministers have taken broom and cleaned some places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X