ஆந்திராவில் கனமழை,,, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திராவில் பெய்துவரும் கனமழை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலன மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இதனால், ஆந்திரா மாநிலத்தின் நெல்லூர், குண்டூர், ஆகிய இடங்களில் நேற்றிரவு மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், விசாகப்பட்டினம் , கிழக்கு கோதாவரி உள்ளிட்ட ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தேவையான இடங்களில் தேசிய பேரிடர் படை, தீயணைப்பு படைகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும். சாலைகளில் விழுந்துள்ள மரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications