மோடியுடன் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு- கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது என கோரிக்கை
டெல்லி: டெல்லியில் இன்று பிரதமர் மோடியினை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தினார்.
டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். அவருடன் தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சென்றார்.

நிதி ஆயோக் அமைக்கப்பட்டவுடன் நடைபெற்ற ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் மூன்று முக்கிய உப குழுக்கள் அமைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இவற்றில் இரண்டாவது உப குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது.
பஞ்சாப் முதல் அமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான இந்தக் குழுவில் தமிழக முதல்வரும் ஒரு உறுப்பினர் என்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மேலும், இச்சந்திப்பில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகா அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினார் முதல்வர் பன்னீர்செல்வம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications