நவம்பர் 8-ல் காவிரி மேற்பார்வை குழுவின் 4வது கூட்டம்
டெல்லி: காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறைச் செயலர் அலோக் ராவத் தலைமையில் அடுத்த மாதம் 8-ந் தேதி கூடுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், கேரள நீர் வளத் துறைத் தலைமைப் பொறியாளர் லத்திகா மற்றும் புதுவை அரசு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மூன்று முறை நடத்தப்பட்ட இக் குழுக் கூட்டங்களில் உரிய தீர்வு காணப்படவில்லை. ஜூலை மாதம் 15-ந் தேதி நடைபெற்ற இக் குழுவின் 3வது கூட்டத்தின்போது தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் அதற்கு மேற்பார்வைக் குழு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் தண்ணீர் திறந்துவிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் முறையிடப்பட்டது. மழை காலத்தை காரணமாகக் கூறி மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், தற்போது 4வது கூட்டம் வரும் நவம்பர் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, டெல்லிக்கு நாளை கர்நாடக அரசு தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத் வர உள்ளதாகவும், தமிழகத்தில் பருவமழை தொடங்கி நன்றாக மழை பெய்து வருவதால் தற்போதைக்கு இக் கூட்டத்தை நடத்த அவசியத் தேவையில்லை என்று காவிரி மேற்பார்வைக் குழுத் தலைவர் அலோக் ராவத்திடம் அவர் வலியுறுத்த உள்ளதாகவும் கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications