பெங்களூர்-சென்னை நடுவே தடம் புரண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ்- பயணிகள் உயிர் தப்பினர்!!

பெங்களூர் யஸ்வந்தபுரா நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் (எண் 12864 ) நேற்று இரவு 8 மணிக்கு கிளம்பியது. இந்த ரயில் இரவு 10.45 மணிக்கு ஆந்திர மாநிலம் குப்பம் ரயில் நிலையத்திற்கு மிக அருகே சென்றுகொண்டிருந்தபோது, மெயின் பாதையைவிட்டு பயனற்று கிடந்த மற்றொரு டிராக்கில் எதிர்பாராதவிதமாக பயணித்தது.
இன்ஜின் டிரைவர் பாலகிருஷ்ணா இதை கவனித்துவிட்டு சுதாரித்துக்கொண்டார். சற்று தூரம் போனாலும் அந்த தண்டவாளம் முடிவடைந்து விடும் என்பதை உணர்ந்த பாலகிருஷ்ணா பெரும் ஆபத்து ஏற்படப்போவதை அறிந்தார். உடனடியாக அவசர கதியில் பிரேக் பிடித்துள்ளார்.
திடீர் பிரேக் போட்ட அதிர்வால் இரு ரயில் பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கிவிட்டன. அதிருஷ்டவசமாக ரயில் பெட்டி கவிழவில்லை. தூக்கத்தில் இருந்த பயணிகள் ரயிலின் அதிர்வால் கண்விழித்து பயந்து போய் அலறினர்.
அதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குப்பம் ரயில் நிலைய அதிகாரிகள், பயணிகளை சமாதானப்படுத்தினர். ஜோலார்பேட்டையில் இருந்து மீட்பு குழு குப்பம் ரயில் நிலையத்துக்கு விரைந்தது. தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கியிருந்த இரு ஸ்லீப்பர் கோச் பெட்டிகளையும், இன்ஜினையும் தூக்கி பழையபடி டிராக்கில் வைத்தனர்.
இதன்பிறகு கால தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் தடம் புரண்டதால், பெங்களூரிலிருந்து குப்பம் வழியாக சென்னைக்கு செல்லும் சென்னைமெயில், காவேரி எக்ஸ்பிரஸ் உட்பட பல ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன. இன்ஜின் டிரைவரின் சமயோஜிதத்தால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications