நிலக்கரி ஊழல்: ஜிண்டால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ
நிலக்கரி ஊழல் வழக்கில் நவீன் ஜிண்டால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
டெல்லி: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.80 கோடி முறைகேடு நடைபெற்ற வழக்கில், நவீன் ஜிண்டால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மத்திய அரசின் ஆட்சி நடந்தபோது, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1.80 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம் ருத்ராபுரி நிலக்கரி சுரங்கம், கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது என்பதை சிபிஐ கண்டுபிடித்தது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த மதுகோடாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில், ஹெச்.சி.குப்தா, க்ரோபா, சமாரியா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பரத் பரஸார், முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் இணைச் செயலர் கே.எஸ். க்ரோபா, முன்னாள் இயக்குனர் கே.சி. சமாரியா, கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர் பவன்குமார் அலுவாலியா ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் ஹெச்.சி.குப்தா உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது சிறைத் தண்டனை பெற்ற இவர்கள் அனைவரும் உடனடி ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சிபிஐ, நவீன் ஜிண்டாலுக்கு எதிராக மீண்டும் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதே சமயம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications