பாம்பை தோள் மீது போட்டு செல்பி எடுக்க முயற்சித்த இளைஞர் பரிதாபப் பலி!
செல்பி எடுக்க நினைத்த இளைஞர் பாம்புக் கடித்ததால் மரணம்.
Recommended Video

நெல்லூர் : செல்பி எடுக்க முயற்சித்த நபரைப் பாம்பு கடித்துக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் கேமரா வந்தபிறகு, செல்பி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆபத்தான இடங்களிலும் மக்கள் சிந்திக்காமல் செல்பி எடுப்பது சமயத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. அப்படிப்பட்ட சம்பவம் தான் இதுவும்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கல்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் என்ற இளைஞர். இவர் கடந்த திங்களன்று தனது நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க சூலூர்பேட்டை சென்றிருந்தார். அப்போது அங்கே சாலையில் பாம்பாட்டி ஒருவர், பாம்பை வைத்து பொதுமக்களிடம் வேடிக்கைக் காட்டி பணம் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த ஜெகதீஷூக்கு பாம்புடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. அவர் தனது ஆசையை பாம்பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாம்பாட்டியும் அதற்கு சம்மதிக்கவே, பாம்பைக் கையில் பிடித்து சிறிதுநேரம் விளையாடியுள்ளார் ஜெகதீஷ். பின்னர் பாம்பாட்டி, பாம்பை எடுத்து ஜெகதீஷின் தோள் மீது போட்டார்.
அப்போது பாம்பை பிடித்தபடி, ஜெகதீஷ் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அதுவரை சாந்தமாக இருந்த பாம்பு, திடீரென ஜெகதீஷைக் கடித்தது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஜெகதீஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை ஜெகதீஷின் நண்பர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
செல்பி மோகத்தால் ஜெகதீஷ் பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications