புத்தாண்டு வருதாம்! அவசரமாக திறக்கப்பட்ட மோர்பி பாலம்! 125 பேருக்கு பதில் 500 பேரை ஏற்றிய நிர்வாகம்
காந்திநகர்: குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து மோசமான விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் மச்சு நதியின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நதியை எளிதாக கடக்க தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இது மோர்பி தொங்கு பாலம் என்று அழைக்கப்படும்.
கடந்த 1879ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம், நேற்று யாருமே எதிர்பாராத வகையில் அறுந்து விழுந்தது. இந்த கொடூர விபத்தில் பல நூறு பேர் அப்படியே ஆற்றில் விழுந்தனர்.

விபத்து
இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதுவரை 141 பேர் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்றிரவு இந்த கோர விபத்து நடந்த நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு குஜராத் அரசு பொறுப்பேற்றுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் நிவாரணங்களையும் அறிவித்து உள்ளது.

குஜராத்தி புத்தாண்டு
இந்த பாலம் புனரமைப்பு பணிகளுக்குப் பின்னர் மிகச் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது. கடந்த அக். 26ஆம் தேதி தான் குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டு இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இந்த பாலத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்தனர். விபத்தில் அதிகப்படியானோர் உயிரிழக்கவும் இது முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

சீரமைப்பு
இதனிடையே இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்காக மோர்பி மாநகராட்சி குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இருந்தது. உலகின் மிகப் பெரிய கடிகார உற்பத்தியாளர் என்று தன்னை குறிப்பிடும் இந்த நிறுவனம் இ-பைக்குகளையும் தயாரித்து வருகிறது. பாலத்தைச் சீரமைப்பு செய்வது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது.

அவரசப்பட்ட நிர்வாகம்
அதில் இருந்து அடுத்த ஏழு மாதங்களில் இந்த பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கப்பட்டு உள்ளது. குஜராத் புத்தாண்டை முன்னிட்டு இந்த பாலம் அக்.26இல் திறக்கப்பட்டது. இருப்பினும், ஒப்பந்தத்தின்படி பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதுபார்க்கப் பாலத்தைக் குறைந்தது 8 முதல் 12 மாதங்கள் வரை மூடி வைக்க நிறுவனம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருக்கிறது. இருப்பினும், அதற்கு முன்பாகவே பாலத்தைத் திறந்ததுள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

சான்றிதழ் கூட இல்லை
தரக்கட்டுப்பாட்டுச் சான்றும் கூடப் பெறாமல் பாலத்தைத் திறந்து உள்ளனர். மேலும், இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் ₹ 17ஐ டிக்கெட் கட்டணமாகவும் வசூலித்து உள்ளனர். இந்த ஒப்பந்தம் மோர்பி மாநகராட்சிக்கும் அஜந்தா நிறுவனத்திற்கும் இடையே போடப்பட்டது. இந்த நிறுவனம் ஓரேவா குழுமத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக வேறு சில கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளது.

2 கோடி ரூபாய்
இரு தரப்பிற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் பாலத்தைப் பராமரிக்கும். மேலும், வரும் சுற்றுலாப் பயணிகளிடமும் கட்டணம் வசூலிக்கும். வரும் 2037 வரை ஒவ்வொரு ஆண்டும் டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பாலத்தின் புனரமைப்பு பணிகளை வெறும் 2 கோடி ரூபாய்க்கு அவர்கள் முடித்து உள்ளனர். இதை ஓரேவா நிறுவனத்தின் தீபக் பரேக் என்பவரே கூறியுள்ளார்.

500 பேர்
இந்த பாலத்தினால் அதிகபட்சம் 125 பேரின் எடையை மட்டுமே தாங்க முடியும். முன்பு இந்த பாலத்தை மோர்பி மாநகராட்சியே கவனித்து வந்தது. அப்போது ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20 பேரைத் தான் பாலத்தில் அனுமதிப்பார்களாம். இருப்பினும், இந்த நிறுவனம் விபத்து நடந்த போது ஒரே நேரத்தில் 500 பேரை அனுமதித்து உள்ளனர். விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாக இருந்து உள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications