பேசிட்டே இருந்தார்.. திடீரென செருப்புக்கடைக்காரர் கன்னத்தில் சப்பென அறைந்த கலெக்டர் மேடம்.. பரபரப்பு

செருப்புக்கடைக்காரர் கன்னத்தில் அறைந்துள்ளார் பெண் கலெக்டர் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

போபால்: பேசிக் கொண்டே இருந்த உதவி கலெக்டர், செருப்புக் கடைக்காரை சப்பென அறைந்துவிட்டார்.. காரணம், ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்துவைத்துள்ளார்.. செருப்புக்கடைக்காரை பெண் கலெக்டர் கன்னத்தில் அறைந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.

கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் பரவி வருகிறது.. தொற்று எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.. உயிர்பலியும் அதிகமாக இருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவை மீறும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்...

 வடமாநிலங்கள்

வடமாநிலங்கள்

இப்படி தேவையில்லாமல் ஊர் சுற்றினால், கொரோனா விதிகளை மீறினால், நம்ம ஊரில்தான் வழக்கு போட்டு, பைக்கையும் பறிமுதல் செய்கிறார்கள். ஆனால், வடமாநிலங்களில் அப்படி இல்லை.. விதிகளை மீறுவோர் மீது சீரியஸ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. மாஸ்க் போடாவிட்டாலும், கடுமையாக நடுரோட்டிலேயே சில போலீசார் பொதுமக்களை தூக்கி போட்டு மிதிக்கிறார்கள்.

 மெடிக்கல் ஷாப்

மெடிக்கல் ஷாப்

எனினும், தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.. இதனால், பல்வேறு மாநிலங்களில் மாவட்ட அதிகாரிகளே நேரில் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அப்படித்தான் நேற்று முன்தினம் சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் மெடிக்கல் ஷாப் போய் கொண்டிருந்தார்.. அவரை போலீசார் மடக்கி ஆவணங்களை செக் செய்து கொண்டிருந்தனர்..

மன்னிப்பு

மன்னிப்பு

அப்போது திடீரென அங்கே கலெக்டர் ரன்பீர் சர்மா வந்தார்.. வந்த வேகத்திலேயே, ஆவேசத்துடன் அவரது செல்போனை பிடுங்கி எறிந்தார்.. சாஹிலை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.. இதையடுத்து போலீசாரும் அவரைத் தாக்கினார்கள்.. இந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அந்த கலெக்டர் மன்னிப்பு கேட்டார்..

ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

"இப்பதான் நானும் என் குடும்பமும் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.. என் அம்மா இன்னும் ஆஸ்பத்திரியில் இருக்காங்க.. இப்படி ஒரு அலட்சியத்தை பார்த்ததும் கன்னத்தில் அறைந்துவிட்டேன்" என்று காரணம் சொல்லி இருந்தார். இதுபோலவே, இன்னொரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.. அங்கு கன்னத்தில் அறைந்தது ஒரு உதவி கலெக்டர்.. அறை வாங்கினது ஒரு செருப்புக்கடைக்காரர்..!

ஊரடங்கு

ஊரடங்கு

ஊரடங்கு என்பதால் கடைகள் எல்லாம் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு உள்ளது.. ஆனால், அம்மாநிலத்தின் ஷாஜ்பூர் பகுதியில் ஒரு செருப்புக்கடைக்காரர் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்திருக்கிறார் போலும்.. அந்த நேரத்தில் உதவி கலெக்டர் மேடம், ரவுண்ட்ஸ் வந்துள்ளார்.. செருப்பு கடை திறந்திருப்பதை பார்த்ததும், அந்த கடைக்காரரை கூப்பிட்டு விசாரித்ததுடன், அவரது கன்னத்தில் சப்பென்று ஒரு அறை விட்டுள்ளார்.

கடைக்காரர்

இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.. இந்த சம்பவம் குறித்து கடைக்காரர் சொல்லும்போது, "நான் கடையை ஷட்டர் இழுத்து மூடித்தான் வைத்திருந்தேன்.. ஆனால் போலீஸ்காரங்கதான், மூடியிருந்த கதவை திறந்து வைத்தனர்.. அத்துடன் என்னை கலெக்டர் மேடம் கன்னத்தில் அடித்துவிட்டார், போலீஸ்காரங்களும் என்னை லத்தியால் அடித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. "நடந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதாகவும், அதை உடனடியாக விசாரித்து, உதவி கலெக்டர் மீது தவறு இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அம்மாநில அமைச்சர் இந்தர்சிங் பார்மர் உறுதி தெரிவித்துள்ளார்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+