டோணியா..? உசேன் போல்ட்டா..? யாரு ஸ்பீடுன்னு ஓடி காட்டு
உலகின் மின்னல் வேக மனிதனான உசேன் போல்டை விட டோணி வேகமானவர் என்று கருத்து வெளியாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இன்று வரை ஜமைக்காவை இருந்த உசேன் போல்டின் வேகமான ஓட்ட சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. உலகில் அதிவேகமான மனிதன் என்ற பட்டம் இன்னும் அவர் கை வசம் தான் இருக்கிறது.
இந்தநிலையில் உலகின் மின்னல் வேக மனிதனான உசேன் போல்டை விட டோணி வேகமானவர் என்று கருத்து வெளியாகி இருக்கிறது. இதற்கு பலரும் ஆதாரத்தோடு புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளனர்.
ஆனால் பலர் இந்த கருத்துக்கு எதிராக பேசியுள்ளனர். மேலும் கண்டிப்பாக டோணியால் உசேன் போல்டை விட வேகமாக ஓட முடியாது என்று தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளனர்.

அதிவேக மனிதன்
இன்று வரை உலகின் அதிவேக மனிதனாக இருப்பது ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் மட்டுமே. 2009ல் பெர்லினில் நடந்த ஓட்டப்பந்தயத்துக்கான உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இவர் 100 மீட்டர் பிரிவில் முதல் இடம் பிடித்தார். அவர் 100 மீட்டரை 9.58 நொடிகளில் கடந்தார். இதுதான் இப்போது வரை உலகின் மிகவும் வேகமான ஓட்டமாக இருக்கிறது.

டோணிதான் பெஸ்ட்டா ?
இதேபோல் டோணியை எடுத்துக் கொண்டால் அவர் 20 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 2.7 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். கிரிக்கெட் உலகில் அவரின் பெஸ்ட் ஓட்டம் இதுதான். அதன்படி அவர் 100 மீட்டரை கடப்பதற்கு 10 நொடிகளுக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொள்கிறார். இதன் காரணமாக டோணி உசேன் போல்டை விட வேகமானவர் இல்லை என்று பலர் கூறியுள்ளனர்.

இருவருக்கும் ஒப்பீடு
சிலர் தற்போது புதிய ஆதாரம் ஒன்றை இதற்காக காட்டுகின்றனர். அதன்படி டோணி 20 மீட்டர் தூரத்தை கடக்க 2.7 எடுக்கிறார். ஆனால் முதல் 20 மீட்டர் தூரத்தை கடக்க மட்டுமே அவர் இவ்வளவு நேரம் எடுக்கிறார். மற்ற 80 மீட்டர் தூரத்தை அவர் இதைவிட வேகமாக கடக்கிறார். ஆனால் உசேன் போல்ட் முதல் 20 மீட்டர் தூரத்தை கடக்கவே 2.89 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். இது டோணியை விட குறைவான நேரம் ஆகும் என்றுள்ளனர்.

யார்தான் பெஸ்ட்
ஓட்டப்பந்தய உலகில் இப்போது உசேன் போல்ட் தான் பெஸ்ட்டாக இருக்கிறார். ஆனால் டோணியையும், போல்டையும் ஒப்பிடும் போது டோணி மிகவும் வேகமாகவே ஓடுகிறார். மேலும் டோணி போல்டை விட 5 வயது அதிகமானவர். மேலும் உடலில் இத்தனை உபகரணங்களை கட்டிக் கொண்டு ஓடினால் கண்டிப்பாக போல்டால் டோணியை விட வேகமாக ஓட முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த விஷயத்தில் தல டோணிக்கு விசில் போடத்தான் வேண்டும்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications