சித்துவின் 'சித்து விளையாட்டு'- கடும் கோபத்தில் காங். மேலிடம்.. பாயக் காத்திருக்கும் நடவடிக்கை!
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத்சிங் சித்து மீது காங்கிரஸ் மேலிடம் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சித்து மீது ஒழுங்கு நடவடிக்கை பாயக் கூடும் என்கின்றன காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள்.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவ்ஜோத்சிங் சித்துவின் நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. முதலில் துணை முதல்வர் பதவிக்காக மல்லுக்கட்டினார் சித்து.
ஆனால் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தரவே முடியாது என்பதில் மாஜி முதல்வர் அமரீந்தர்சிங் உறுதியாக இருந்தார். அதனால் வேறுவழியே இல்லாமல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்கப்பட்டார் சித்து.

சித்துவின் சித்து விளையாட்டு
அத்துடன் நிற்காமல் முதல்வர் பதவிக்கு குறிவைத்தார் சித்து. இதற்காக அமரீந்தர்சிங்குக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டார் சித்து. அப்போதும் கூட காங். மேலிடம் அமரீந்தர்சிங்க்குக்கு ஆதரவாக இருந்தது. ஒரு கட்டத்தில் அமரீந்தர்சிங்குக்கு எதிராக 50 எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டார் சித்து.

அமரீந்தர்சிங் ராஜினாமா
இதனால் வேறுவழியே இல்லாமல் அமரீந்தர்சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமக்குதான் முதல்வர் பதவி கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்தார் சித்து. ஆனால் பதவி விலகிய அமரீந்தர்சிங், சித்துவை முதல்வராக்க மிக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பாகிஸ்தானுடன் உறவு வைத்திருக்கும் தேசவிரோதி சித்து என விமர்சித்தார் அமரீந்தர்சிங்.

சித்துவுக்கு ஏமாற்றம்
இதையடுத்து சித்துவுக்கு மிக நெருக்கமான சரண்ஜித்சிங் சன்னியை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கியது. இதில் சித்து அதிருப்தி அடைந்தார். அத்துடன் அமைச்சர்கள், அமைச்சர்களின் இலாகாக்கள் ஆகியவை தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவரான சித்துவுடன் ஆலோசனை நடத்தாமல் டெல்லி மேலிடமே அனைத்தையும் தீர்மானித்தது. இதில் ரொம்பவே கடுப்பாகிப் போன சித்து, சமரசம் செய்து கொள்ள முடியாது என மொட்டையாக ஒரு ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
Recommended Video

சித்து மீது கடும் அதிருப்தி
அப்போது கூட, சித்துவிடம் ரொம்ப அவசரப்படாதீங்க.. வெயிட் பண்ணுங்க என்றுதான் சாப்ட் முகத்தை காட்டியிருக்கிறது டெல்லி. ஆனால் சித்துவோ தமது ராஜினாமா கடிதத்தை ஊடகங்களுக்கு கொடுத்தார். இதில் செம கடுப்பாகிவிட்டதாம் டெல்லி மேலிடம். சித்து என்கிற ஒற்றை மனிதரால் வெல்லும் வாய்ப்புள்ள பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அழிந்து போகும் நிலைதான் உருவாகிறது என்பதை லேட்டாகவே டெல்லி மேலிடம் புரிந்து கொண்டதாம். இதனால் சித்து மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் டெல்லி தயாராகி வருகிறதாம்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications