நீங்க மட்டும்தான் தூக்குவீங்களா? ம.பி.யில் 6 பாஜக எம்.எல்.ஏக்களை வளைத்து காங். அதிரடி பதிலடி
போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க வழக்கம் போல பாஜக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக பாஜகவின் 6 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் வளைத்திருப்பதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.
ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பாஜக உருவாக்கியுள்ள திட்டத்துக்கு பெயர் ஆபரேஷன் லோட்டஸ். இதனடிப்படையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பண பேரம், அமைச்சர் பதவி பேரம் என ஆசைகாட்டி ராஜினாமா செய்ய வைப்பது, கட்சி தாவ வைப்பது என்பதை யுக்தியாகவே பாஜக கடைபிடித்து வருகிறது.
இதனடிப்படையில்தான் அண்மையில் கர்நாடகாவில் ஆட்சியையும் பாஜக கைப்பற்றியது. தற்போது மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசை கவிழ்ப்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதனால் பிற மாநிலங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி வைத்திருக்கிறது. இவர்களை மீட்பதில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

பாஜக வசம் 10 எம்.எல்.ஏக்கள்
தற்போதைய நிலையில் காங்கிரஸின் 10 எம்.எல்.ஏக்கள் பாஜக வசம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கமல்நாத்தின் எதிர்கோஷ்டியான திக்விஜய்சிங், ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக பாஜக பக்கம் தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் சித்தராமையா ஆதரவாளர்கள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

பேரம் பேசும் பதிவுகள்
தங்களுக்கு ரூ25கோடி பணம், அமைச்சர் பதவி தருவதாக பாஜக பேரம் பேசியது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைய்ஜ்நாத் குசாவா கூறியுள்ளார். பாஜகவின் பிரமோத் சர்மாவின் இந்த பேரத்தை நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிரமோத் சர்மா பேரம் பேசிய பதிவும் தம்மிடம் இருக்கிறது என்றும் குசாவா கூறியிருக்கிறார்.

பாஜகவுக்கு பதிலடி
அதேநேரத்தில் பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் பஞ்சாவை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. அதாவது பாஜக எம்.எல்.,ஏக்களை தங்கள் பக்கம் கொண்டுவருவது என்பதுதான் காங்கிரஸின் ஆபரேஷன். தற்போது பாஜகவின் 6 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் வளைத்துள்ளதாம். பாஜகவின் சரத் கோல், நாராயண் திரிபாதி ஆகியோருடன் முதல்வர் கமல்நாத் தொடர்பில் இருந்து வருகிறாராம்.

காங். வலையில் பாஜக எம்.எல்.ஏக்கள்
மேலும் பாஜக எம்.எல்.ஏக்களான ராஜேஷ் பிரஜாபதி, மணிஷா சிங், ராகேஷ் கிரி, சிவநாராயண்சிங் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியின் வலையில் வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாஜகவின் ஒவ்வொரு மூவ்-க்கும் சரியான பதிலடியை காங்கிரஸ் கொடுக்க தயாராக இருந்து வருகிறது. இந்த அக்கப்போர்களால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications