மருமகள், 3 பேரன்கள் உடல் கருகி பலி: முன்னாள் காங். எம்.பி., மனைவி, மகன் கைது
வாரங்கால்: வாரங்காலில் மருமகள் மற்றும் 3 பேரன்கள் உயிருடன் எரிந்து பலியானது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா, அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்காலில் வசித்து வருபவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா. அவரது மகன் அனில் குமாரும், சரிகா என்பவரும் காதலித்து கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அபினவ்(9), அயன்(5), ஸ்ரீயன்(3) என மூன்று மகன்கள்.

சரிகா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சரிகா மற்றும் அவரது மகன்கள் உடல் கருகி பலியாகினர்.

வரதட்சணை புகார் கொடுத்த பிறகு அனில் குமார் தரை தளத்திலும், சரிகா தனது மகன்களுடன் முதல் தளத்திலும், ராஜய்யா தனது மனைவி மாதவியுடன் இரண்டாவது தளத்திலும் வசித்து வந்தனர். இந்நிலையில் முதல் தளத்தில் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சரிகாவும், அவரது மகன்களும் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின்பேரில் ராஜய்யா, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாதவி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரிகாவின் சகோதரி அர்ச்சனா கூறுகையில்,
ராஜய்யாவும், அவரது மனைவி, மகனும் என் சகோதரியை கொடுமைபடுத்தி வந்தனர். ராஜய்யாவின் வீட்டில் வசிப்பது கஷ்டமாக உள்ளது என்று சரிகா கடந்த ஆண்டு எங்களிடம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் தான் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தோம். அவர் தனது கணவர் மற்றும் ராஜய்யா மீது வாரங்கால் போலீசில் புகார் அளித்திருந்தார். என் சகோதரி தற்கொலை செய்திருக்க மாட்டார். அவரை ராஜய்யாவின் குடும்பத்தார் தான் கொலை செய்துவிட்டனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications