கர்நாடகா, திரிபுரா ஆளுநர்கள் இன்றுடன் பணி ஓய்வு!
டெல்லி: மத்திய அரசின் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே கர்நாடகா மற்றும் திரிபுரா மாநில ஆளுநர்களின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. கர்நாடகா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக தமிழக ஆளுநர் ரோசையா கவனிப்பார்.
மத்தியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு அமைந்த நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பலரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வந்தது.

மத்திய அரசின் இந்த நெருக்கடியால் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் நாகாலாந்து மாநில ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் மேற்கு வங்காளம் மற்றும் கோவா ஆளுநர்களும் விரைவில் பதவி விலக உள்ளனர். ஆனால் கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித் பதவி விலக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜ் மற்றும் திரிபுரா ஆளுநர் தேவானந்த் கொன்வர் ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இவர்களுக்கு பதவி நீட்டிப்பு எதுவும் வழங்கப்படாததால் இருவரும் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.
கர்நாடக ஆளுநரான பரத்வாஜ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சட்ட அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். பின்னர் 2009-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி, கர்நாடகாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதைப்போல முன்னாள் அசாம் அமைச்சரான தேவானந்த் கொன்வர், பீகார் மாநில ஆளுநராக 2009-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் கடந்த ஆண்டு மார்ச் 21-ந் தேதி முதல் திரிபுரா ஆளுநரானார்.
இந்த இரு ஆளுநர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து தமிழக ஆளுநர் ரோசையா கர்நாடக மாநில ஆளுநர் பொறுப்பையும், மிசோரம் மாநில ஆளுநர் புருசோத்தமன், திரிபுரா மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பர்.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications