எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்... தேசிய அரசியலில் புதிய 'ட்விஸ்ட்'!
டெல்லி: எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு திட்டங்களை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தோல்வி கிடைத்தது. மொத்தமுள்ள 542 இடங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். இந்த நிலையில், எதிர்க்கட்சி இல்லாமல் தனி ஆவர்த்தனம் நடத்துவதற்கான வாய்ப்பை பாஜக பெற்றிருக்கிறது.
இதனை முறியடிப்பதற்கான வியூகங்களை காங்கிரஸ் கட்சி வகுத்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 5 எம்.பி.க்கள் உள்ளனர்.
இரண்டு கட்சிகளும் இணையும்போது, காங்கிரஸ் கட்சியின் பலம் 57 ஆக உயரும். இதன்மூலமாக எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துவிட முடியும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், ராகுல் காங்கி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளதால், அந்த இடத்திற்கு சரத்பவாரை கொண்டு வந்துவிடலாம் என்ற யோசனையும் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.
ஆனால், இந்த யோசனையை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒப்புக் கொள்ள மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மஹாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சிறப்பான வளர்ச்சி பெற்று வருவதாகவும், எனவே இந்த முடிவை அவர் ஏற்க மாட்டார் என்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இது முடியாதபட்சத்தில், 'பிளான் பி' திட்டத்தையும் காங்கிரஸ் கையில் வைத்துள்ளது. அதன்படி, சுயேட்சை எம்.பி.க்களான சுமலதா, நவ்னீத் ரவிராணா, நம்பாகுமார் சரணியா, மோகன் பாய் டெல்கர் ஆகியோரின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications