அஸ்ஸாமில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
டெல்லி: அஸ்ஸாமில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் அங்கு தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாகவும் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து கருத்துகணிப்பு நடத்தியது. மார்ச் மாதம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. கருத்துக்கணிப்பின் முடிவுகல் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

126 தொகுதிகள் கொண்ட அசாம் சட்டசபைக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 55 தொகுதிகளில் வெற்றி பெறும். இது மெஜாரிட்டியை விட 9 தொகுதிகள் குறைவு.
ஆளும் காங்கிரஸ் 53 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 12 இடங்களிலும் பிற கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகிறது.

மேலும், மொத்த வாக்குகளில் காங்கிரஸ் கட்சிக்கு 36.9 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 35.3 சதவீத ஓட்டுகளும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிக்கு 12.1 சதவீத வாக்குகளும் பிற கட்சிகளுக்கு 15.8 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
CVoter #OpinionPoll2016 projection: BJP’s CM candidate predicts clear majority for party, says Congress will get 30 seats or less
— TIMES NOW (@TimesNow) April 1, 2016
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications