பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து ராகுல் காந்தி.. ஆர்எஸ்எஸ் விழாவிற்கு விரைவில் அழைக்கப்படுகிறார்!
ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் விழாவில் கலந்து கொள்ள, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்பட உள்ளார்.
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் விழாவில் கலந்து கொள்ள, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்பட உள்ளார்.
இந்த விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் இந்த விழா நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குறித்தும் பொருளாதார சூழ்நிலை குறித்தும் இதில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இதற்கு பல முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அழைப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடுமையான தாக்குதல்
சில நாட்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்து கடுமையாக பேசி இருந்தார். அதேபோல் எகிப்தில் உள்ள தீவிரவாத அமைப்பு ஒன்றுடன், ஒப்பிட்டு, இரண்டு அமைப்பும் ஒரே வருடத்தில் தொடங்கப்பட்டது , இரண்டும் ஒரே மாதிரியான குறிக்கோள் கொண்டது என்று கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்.

அழைப்பு விடுத்துள்ளது
இந்த கண்டனத்தின் சூடு குறையும் முன் ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, ''இந்தியாவின் எதிர்காலம்'' என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அடுத்த மாதம் நடத்த உள்ள நிகழ்விற்கு ராகுல் காந்தி அழைக்கப்பட உள்ளார். இதற்கான முறையான அழைப்பிதழ் அவருக்கு அளிக்கப்பட உள்ளது.

ஏற்பாரா
இந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலும் ராகுல் காந்தி இந்த சந்திப்பிற்கு செல்வார் என்று கூறப்படுகிறது. இதில் அரசியல் பாகுபாடு இல்லாத நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தி மரியாதை கருதி செல்ல வாய்ப்புள்ளது. எல்லா முக்கிய தலைவர்களும் கட்சி பாகுபாடு இன்றி இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட உள்ளனர்.

ஏற்கனவே என்ன நடந்தது
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டு இருந்தார். பிரணாப் முகர்ஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications