For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுலை அசிங்கப்படுத்த நினைத்த பாஜக.. அம்பலப்படுத்திய காங்.!!

Google Oneindia Tamil News

டெல்லி: புகழ் பெற்ற சோமநாத் கோவிலில் வைக்கப்பட்ட "இந்துக்கள் அல்லாத பார்வையாளர் வருகைப் பதிவேட்டில்" காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக பாஜகவினர் பரப்பிய வதந்தியை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சோம்நாத் கோவிலின் ஒரிஜினல் வருகைப் பதிவேட்டின் நகலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அது மட்டுமே கோவிலில் உள்ளதாகவும், அதில்தான் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாகவும் கூறியுள்ளது.

Congress exposes BJP's fabricated campaign against Rahul Gandhi

இந்துக்கள் அல்லாத பார்வையாளர் வருகைப் பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக கூறி பாஜகவினர், ராகுல் பெயரை கெடுக்க முயன்றதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக வெளியான புகைப்படமும் புனையப்பட்டது என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி உண்மையான வருகைப் பதிவேட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டிவீட்டில், சோம்நாத் கோவிலில் ஒரே ஒரு பார்வையாளர் வருகைப்பதிவேடுதான் உள்ளது. அதில்தான் ராகுல் காந்தி கையெழுத்திட்டுள்ளார். அது இதுதான். இதைத் தவிர வேறு ஏதேனும் புகைப்படம் காட்டப்பட்டால் அது புனையப்பட்டது என்று அர்த்தம். விரக்தி அதிகமானால் நடவடிக்கைகளும் கூட விரக்தியில்தான் முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Congress exposes BJP's fabricated campaign against Rahul Gandhi

முன்னதாக குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி சோம்நாத் கோவிலுக்குப் போயிருந்தார். இதை வைத்துத்தான் சின்னதாக ஒரு டிராமா போட்டு விட்டனர் பாஜகவினர். போலியான ஒரு வருகையாளர் பதிவேடு புகைப்படத்தை பரப்பிய அவர்கள், ராகுல் காந்தி இந்துக்கள் அல்லாதவர்களுக்கான வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு தான் ஒரு தலைபட்சமானவர் என்பதை காட்டி விட்டார் என்று கிளப்பி விட்டு விட்டனர்.

இதையடுத்தே காங்கிரஸ் கட்சி தற்போது புகைப்பட ஆதாரத்துடன் விளக்கம் வெளியிட்டு பாஜகவினரின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது.

English summary
Congress party has clarified that, There is only one visitor's book at Somnath Temple that was signed by Congress VP Rahul Gandhi. Any other image being circulated is fabricated, in a Tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X