லட்சத்தீவின் அமைதியை சீர்குலைக்கிறார் பிரஃபுல் படேல்... மகிளா காங்கிரஸ் நிர்வாகி குற்றச்சாட்டு..!
லட்சத்தீவு: யூனியன் டெரிடரி பிரதேசமான லட்சத்தீவின் அமைதியை அங்கு நிர்வாக அதிகாரியாக இருக்கும் பிரஃபுல் கோடா படேல் சீர்குலைத்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஹசீனா சையத்.
லட்சத்தீவு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக உள்ள இவர் மாதத்தில் ஒரு வாரமாவது அங்கு கட்சிப் பணிகளை செய்யக்கூடியவர். இந்நிலையில் லட்சத்தீவுக்கு வந்த சோதனை குறித்து ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்ட விவரம் பின்வருமாறு;

"இயற்கை எழில் கொஞ்சும் அமைதிப்பூங்காவாக திகழக்கூடிய லட்சத்தீவுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கக்கூடிய மக்களில் பெரும்பான்மையானோர் பழங்குடியின இஸ்லாமியர்கள். அவர்கள் யார் வம்புக்கும் போகாமல் இறைவனை உயிருக்கு உயிராக நேசித்து வணக்க வழிபாடுகளை செய்யக்கூடியவர்கள். இந்திதாவிலேயே கிரைம் ரேட் பூஜ்யம் உள்ள பகுதி என்றால் அது லட்சத்தீவு தான். அங்கு இதுவரை ஒரு திருட்டு சம்பவமோ, கொலையோ- கொள்ளையோ நடந்ததில்லை. அந்தளவுக்கு அமைதியே உருவாக திகழும் பகுதி."
"மேலும் அங்கு மதுவின் வாசத்தை கூட உங்களால் நுகர முடியாது. அந்தளவு அங்கு கட்டுப்பாடுகளுடன் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அங்கு நிர்வாக அதிகாரியாக வந்திருக்கும் குஜராத் முன்னாள் அமைச்சர் பிரபுல் கோடா படேல் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தென்னை மரத்துக்கு கூட காவிச்சாயம் பூசுவதுடன் மக்கள் விரோத சட்டங்களை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மீன் சாப்பிடக்கூடாது, பீப் சாப்பிடக் கூடாது என ஆர்டர் போட இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. பாவம் லட்சத்தீவு மக்கள், அங்கிருந்து என்னை தொடர்பு கொள்பவர்கள் தங்கள் வேதனைகளை கண்ணீர் மல்க கூறுகின்றனர்."

"இதை எங்கள் காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. விரைவில் இந்த விவகாரத்திற்கு நல்ல தீர்வை பெற்றுக் கொடிப்போம். பிரஃபுல் கோடா படேல் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இவரது பிரித்தாளும் சூழ்ச்சி லட்சத்தீவில் நிச்சயம் அரங்கேறாது. லட்சத்தீவு குறித்த செய்திகளில் ஊடகங்கள் கவனம் செலுத்தாதது உள்ளபடியே எனக்கு வருத்தமளிக்கிறது. அங்கு வாழும் மக்கள் மிகவும் அமைதியானவர்கள். இன்னும் சொல்லப்போனால் பழையகால வாழ்க்கை முறையையே பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். பாஜக இது போன்ற செயல்களை கைவிட்டு கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்."
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications