Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனுமன் வேடமணிந்த ராகுல் காந்தி.. அடுத்து செய்ததுதான் ஹைலைட்.. பாரத் நியாய யாத்திரையில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று அசாமில் யாத்திரை மேற்கொண்டார். அப்போது அனுமன் வேடம் அணிந்து கதாயுதத்துடன் ராகுல் காந்தி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பாஜக பல்வேறு யூகங்களை மேற்கொண்டு வருகிறது. இதேபோல், காங்கிரசும் ஓரணில் இணைந்து பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

 Congress Leader Rahul Gandhi turns Hanuman poses with Bajrang Balimask and mace in Yatra


இதற்காக காங்கிரஸ் கட்சியும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதிலும், குறிப்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அதாவது நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு நோக்கி 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு ‛பாரத் ஜோடோ யாத்திரை' என்ற நடைப்பயணத்தை தொடங்கினர். இது காங்கிரஸ் தொண்டகளுக்கு உற்சாகத்தை அளித்தது.

பாத யாத்திரை: இதனை தொடர்ந்து தற்போது ராகுல் காந்தி 2 ஆம் கட்டமாக மற்றொரு பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடா நியாய பாத யாத்திரை என்ற பெயர் வைத்துள்ளனர். அதன்படி, மணிப்பூரில் இருந்து மும்பை வரை அதாவது நாட்டின் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரை 13 மாநிலங்கள் 6,700 கி.மீ தொலைவு என 2 வது கட்டமாம பாரத் ஜோடா நியாய பாத யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.

அசாமில் ராகுல் காந்தி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். பாரத் ஜோடோ யாத்திரையில் நடந்தே சென்று மக்களை சந்தித்த ராகுல் காந்தி இந்த முறை நடந்து செல்வதோடு, வாகனங்களிலும் பயணிக்க உள்ளார். மொத்தம் 66 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி 6,713 கிலோ மீட்டர் தொலைவை கடந்து மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிக்க உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 14 ஆம் தேதி பாரத் ஜோடா நியாய பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, தொடர்ந்து நாகலாந்து மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது அசாம் மாநிலத்தில் பாத யாத்திரை மூலம் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் பிரபலம் வாய்ந்தத, பழமையான "ஸ்ரீ ஸ்ரீ அவுனியாதி சத்ரா" என்ற வைணவ மடத்திற்கு சென்று ஆசி பெற்றார்.

அனுமன் வேடத்தில் ராகுல் காந்தி: தொடர்ந்து அந்த கோவிலுக்கு அனுமன் வேடமணிந்து வந்திருந்த பக்தர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது அவர்களது அனுமன் முகமூடியை வாங்கி ராகுல் காந்தி அணிந்துகொண்டார். தொடர்ந்து அனுமன் கதாயுதத்தையும் வாங்கி அனுமன் போல ராகுல் காந்தி போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு போஸ் கொடுத்தார். ராகுல் காந்தி அனுமன் வேடம் அணிந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாளை மறுநாள் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அது தொடர்பான பரபரப்பு இருக்கும் நிலையில், அசாமில் ராகுல் காந்தி அனுமன் முகமூடி அணிந்து கதாயுதத்துடன் போஸ் கொடுத்தது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+