ராகுலின் தொகுதியில் காங்கிரஸ் தலைவரின் மகன் சுட்டுக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
அமேதி: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் மகன் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் தலைவர் ஜங் பகதூர் சிங். அவரது மகன் மகேந்திர பிரதாப் சிங்(41). அவர் சனிக்கிழமை இரவு தனது உதவியாளர் சுரேஷ் குமாருடன் காரில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர்களின் கார் ராணிகஞ்ச் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருக்கையில் மர்ம நபர்கள் காரை வழிமறித்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பிரதாப் சிங்கும், அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்த கார் டிரைவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். ஜங் பகதூர் சிங் உத்தர பிரதேச ராஜ்ய பந்தரன் நிகாமின் முன்னாள் தலைவர் ஆவார். அந்த பதவி மாநில அமைச்சர் பதவிக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேதி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதி ஆகும்.












Click it and Unblock the Notifications