Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாவர்க்கர் படம்.. காவி நிற உடையுடன் குஜராத் மாணவர்கள் பேரணி – தட்டிக்கேட்டால் வழக்கு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சுமூகமாகவும், சில இடங்களில் சின்ன சின்ன சர்ச்சைகளுடனும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால் குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி, கடந்த 3 நாட்களுக்கு மேலாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

குஜராத் மாநிலம், சோடிலா டவுன் அருகே சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் சேவா தல் பிரிவு தேசிய தலைவர் லால்ஜி தேசாய் , முன்னாள் எம்எல்ஏவும் செயல் தலைவருமான ருத்விக் மக்வானா, ராகவ் மெட்டாலியா, கோபால் தொலியா, ஹரேஷ் ஜாப்டியா உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருக்கும்போது ஒரு பள்ளி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

Congress Savarkar

அப்போது, மாணவர்கள் அணிந்திருந்த உடையை கண்டு அவர்கள் அதிர்ச்சிடைந்தனர். பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தங்களின் சீருடைக்கு மேல், காவி நிற டி-ஷர்ட்டை அணிந்திருந்தனர். அதில் வீர சாவர்க்கர் படம் அச்சிடப்பட்டிருந்தது. மாணவர்களின் அருகிலேயே பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கு வந்த பள்ளி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர்கள் 5 பேர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கல்பேஷ் செஹான் அளித்துள்ள புகாரில், 'காங்கிரஸ் நிர்வாகிகள் மாணவர்களின் பேரணியை உடனே நிறுத்த சொல்லி வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சாவர்க்கரின் படம் பொறித்த உடையை எதற்காக குழந்தைகளை அணிய வைத்துள்ளீர்கள். மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமான ஒருவரான சாவர்க்கரின் படம் பொறித்த டிஷர்ட்டை மாணவர்களை அணிய வைக்க அவமானமாக இல்லையா. இப்படியே நாளை நாதுராம் கோட்ஷேவின் படம் பொறித்த டிஷர்ட்டை வழங்குவீர்களா. இப்படி செய்து சுதந்திரத்தை அவமதிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் நிர்வாகி தேசாய் கூறினார்." என்று சௌஹான் குறிப்பிட்டுள்ளார்.

congress savarkar

மேலும் சௌஹான் அளித்துள்ள புகார் மனுவில் அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை திரங் யாத்திரை நடத்துவதற்காக சொல்லி மும்பையைச் சேர்ந்த இந்துமதி வசந்த்லால் ஷா அறக்கட்டளையைச் சேர்ந்த உமேஷ் ஷா என்ற நிர்வாகி சில உடைகளையும் அனுப்பி வைத்துள்ளார். காவி நிறம் கொண்ட அந்த டிஷர்ட்டில் வீர சாவர்க்கர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. என்று விளக்கம் அளித்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குஜராத் அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சாக்திஸின் கோஹில் பாஜக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். "சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயேர்கள் அடிப்பதை ஆதாரம் இல்லாத புகார்களுக்கு வழக்குப்பதிவு செய்து சர்வாதிகாரம் செலுத்தினார்கள். அந்த வரலாற்றை நினைவுகூறும் வகையில் இந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது," என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+