ஈஸியாலாம் வெல்ல முடியாது.. நடிகை கங்கனா ரனாவத்தை வீழ்த்த காங்கிரஸ் பிரமாஸ்திரம்.. வேட்பாளர பாருங்க
சிம்லா: வரும் லோக்சபா தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கங்கனா ரனாவத்தை வீழ்த்த காங்கிரஸ் கட்சி பெரிய பிளான் போட்டுள்ளது. மேலும் கங்கனா ரனாவத்தை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இவர் போட்டியிடும் பட்சத்தில் கங்கனா ரனாவத் வெற்றி பெறுவது எளிதாக இருக்காது.
இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் தாம்தூம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி லோக்சபா தொகுதியில் கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மண்டி என்பது கங்கனா ரனாவத்தின் சொந்த தொகுதியாகும். இந்நிலையில் தான் தற்போது கங்கனா ரனாவத் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இந்த தொகுதிக்கு கடைசி கட்டமாக ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் இன்னும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கங்கனா ரனாவத்தை மண்டி தொகுதியில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி புதிய திட்டத்தை திட்டி உள்ளது. அதாவது கங்கனா ரனாவத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், சிம்லா புறநகர் தொகுதி எம்எல்ஏவான விக்ரமாதித்ய சிங்கை களமிறக்க வியூகம் வகுத்துள்ளது.
இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரபத்ரசிங்கின் மகன். இவரது தாய் பெயர் பிரதீபா சிங். இவர் தான் தற்போது மண்டி தொகுதி எம்பியாகவும், இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். பிரதீபா சிங் இந்த தொகுதியில் 2004, 2013 இடைத்தேர்தல் மற்றும் 2021 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றார். அவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. இதனால் வரும் தேர்தலில் தனக்கு பதில் மகன் விக்ரமாதித்ய சிங்கை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதீபா சிங் கூறுகையில், ‛‛ வரும் லோக்சபா தேர்தலில் மண்டி தொகுதியில் எனது மகன் விக்ரமாதித்ய சிங் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனது மகனுக்கு தொகுதி மக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்'' என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் வரும் லோக்சபா தேர்தலில் மண்டி தொகுதியில் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த தொகுதிக்கு கடைசி கட்டமாக ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் விக்ரமாதித்ய சிங்கின் பெயர் காங்கிரஸ் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த தொகுதியில் விக்ரமாதித்ய சிங்கின் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாக உள்ளது. இங்கு 3 இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 20 முறை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விக்ரமாதித்ய சிங்கின் தந்தை வீரபத்ரசிங் 3 முறை எம்பியாகவும், வீரபத்ரசிங்கின் மனைவியும், விக்ரமாதித்ய சிங்கின் தாய் பிரதீபா சிங் 3 முறை எம்பியாகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications