என்னது.. கோவாவில் பாஜக ஆட்சியமைக்க முடியாதா.. என்ன இப்படி சொல்றாரே திகம்பர் காமத்
பனாஜி: ‛கோவாவில் பாஜகவை அல்லாத ஆட்சி அமைக்க அனைத்து வழிகளையும் பரிசீலனை செய்து வருகிறோம்' என அம்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் கூறினார்.
கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 332 வேட்பாளர்கள் களத்தில் நின்ற நிலையில் மொத்தம் 79.61 சதவீத ஓட்டுகள் பதிவானது.
இந்த ஓட்டுக்கள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பெரும்பான்மை இல்லை
இந்த தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 11 இடங்களிலும், சயேச்சைகள் 3 இடங்களிலும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி,ஆம் ஆத்மி தலா 2 இடங்களிலும் வென்றது. ஆர்ஜிபி, ஜிஎப்பி தலா ஒரு இடங்களிலும் வாகை சூடியது. கோவாவில் ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். இதனால் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 2 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

வழி குறித்து ஆலோசனை
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திகம்பர் காமத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். பாஜக ஆட்சியமைக்க காலம் தாழ்த்துகிறதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‛‛தேர்தல் முடிவு வெளியாகி இவ்வளவு நாள் ஆகியும் பாஜக இன்னும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் அங்கு பிரச்சனை இருப்பது தெரிகிறது. கோவாவில் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான அனைத்து வழிகள் குறித்தும் காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகிறது. இப்படி செய்வது தான் சட்டசபை தேர்தல் தொடர்பான மக்கள் தீர்ப்பை நிலைநிறுத்தும். ஏனென்றால் தேர்தலில் பாஜக 33.31 சதவீத ஓட்டுக்களை மட்டும் பெற்றுள்ளது. அதன்படி பார்த்தால் 66.69 சதவீதம் பேர் பாஜகவை விரும்பவில்லை என்பது தெரிகிறது.

புத்திசாலித்தனமாக...
மேலும் சில எம்எல்ஏக்களும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும் கோவா மக்களுக்கு பாஜக அல்லாத ஆட்சியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பாஜகவுக்கு அதிகரிப்பு
இதன் தொடர்ச்சியாக பாஜகவின் எம்எல்ஏக்கள் சுபாஷ் பால்தேசாய், கோவிந்த் காட், தாஜி சால்கார் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், ‛‛பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 4 அல்லது 5 நாளில் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது பாஜகவுக்கான ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு குறைந்துள்ளது'' என்றனர்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications