தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா.. அவமதித்ததாக காங். குற்றச்சாட்டு
அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கி தேசியக் கொடியை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
Recommended Video

டெல்லி: தேசியக் கொடியை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் 72ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். அதே போல, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். இதே போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்களால் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர தின நாளில் அரசியல் கட்சி அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல், டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக அமித் ஷா இறக்கியதால் தேசியக் கொடி தரையை தொட்டது. இதனால் சில வினாடிகள் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் உடனடியாக தேசிய கொடியை அமித்ஷா மீண்டும் மேலே ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
जो देश का झंडा नहीं संभाल सकते, वो देश क्या संभालेंगे?
— Congress (@INCIndia) August 15, 2018
50 साल से ज्यादा देश के तिरंगे का तिरस्कार करने वालों ने अगर ये नहीं किया होता तो शायद आज तिरंगे का ऐसा अपमान न होता।
दूसरों को देशभक्ति का सर्टिफिकेट देने वालों को राष्ट्रगान का तौर-तरीका तक पता नहीं। pic.twitter.com/FmiEI5B7D7
அமித்ஷா இப்படி தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக கீழே இறக்கிய செயலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், "நாட்டின் கொடியையே கையாள முடியாதவர்கள் நாட்டை எப்படி கையாளுவார்கள்.
50 ஆண்டுகளுக்கு மேலாக மூவர்ண கொடியை வெறுத்து வருபவர்கள், அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், இன்று தேசிய கொடி அவமதிக்கப்படாமல் இருந்திருக்கும்.
தேசபக்தி தொடர்பாக மற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்குபவர்கள், தேசிய கீதத்தை பற்றி அறிய மாட்டார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications