பெட்ரோல் விலை உயர்வு என்பது காங்கிரசின் பொய் பிரச்சாரம்.. பிரக்யா கருத்து.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
போபால்: பெட்ரோல், டீசல் விலை ஏறவில்லை, இதை பற்றி காங்கிரஸ் கட்சிதான் பொய் பிரச்சாரம் செய்கிறது என்று எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இவர் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். நடக்க முடியாமல் இருக்கிறேன் என்று கூறி வீல் சேரில் வலம் வரும் இவர், உடல்நிலையை காரணம் காட்டி மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு பெற்று வருகிறார்.
ஆனால் சமீபத்தில் இவர் திருமண விழா ஒன்றில் சந்தோசமாக குதித்து குதித்து ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடக்க முடியாது என்று கூறியவர் நடனம் ஆடியது சர்ச்சையானது.

பேச்சு
இந்த நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பிரக்யா மீண்டும் வைரலாகி உள்ளார். போபாலில் கூட்டம் ஒன்றில் பேசிய பிரக்யா தாக்கூர், பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. விலை இன்னும் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. காங்கிரஸ்தான் இதில் பொய்யான பிரச்சாரம் செய்கிறது என்று பிரக்யா தாக்கூர் குறிப்பிட்டு இருந்தார்.

வைரல்
இவரின் இந்த கருத்து இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. என்ன பெட்ரோல், டீசல் விலை உயரவில்லையா? என்ன மேடம் காமெடி பண்றீங்களா என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். நல்லவேளை பெட்ரோல் விலை பற்றி பேசுபவர்களை ஆப்கானிஸ்தான் போ என்று பிரக்யா தாகூர் சொல்லாதது ஆச்சர்யம்தான் என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

கிண்டல்
பெட்ரோலுக்கு பதில் எல்லோரும் கோமியத்தை பயன்படுத்துங்க என்று சொல்லாமல் நல்லவேளை இதை காங்கிரஸ் பொய் பிரச்சாரம் என்ற பிரக்யா குறிப்பிட்டார் என்று இன்னொரு நெட்டிசன் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

கணக்கு வீக்கா?
இன்னொரு நெட்டிசன், நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இல்லை. என்னை பொறுத்தவரை 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்பது முன்பு இருந் 70 ரூபாயை விட அதிகம்தான். ஆனால் பிரக்யா விலை ஏற்றம் என்பதை பொய் பிரச்சாரம் என்று சொல்கிறார்.. அப்ப நான்தான் கணக்கில் வீக்கா? என்று கிண்டலாக கேட்டு இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications