ரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி.... பாஜகவின் பேரம்... ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்!

பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டளிக்க காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவியைத் தருவதாக பாஜக பேரம் பேசியுள்ள ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

congress releases audio on mla being lured

அதன்படி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி ரூபாய் தருவதாக பாஜக பேரம் பேசிவருவதாக, மஜதவின் குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக சார்பில் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் முழு ஒப்புதலோடுதான் தான் பேசுவதாக அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார்.

நாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், இந்த ஆடியோ வெளியாகி உள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+