வாக்குறுதிகள் அமோகம்! பெண்களுக்கு மாதம் ரூ2,000- ஹரியானா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ2,000 செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
ஹரியானாவில் அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஹரியானாவில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிராக மிகப் பெரும் அதிருப்தி அலை வீசுகிறது.

பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலையை அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சி ஏராளமான வாக்குறுதிகளை ஏற்கனவே வழங்கி இருக்கிறது. தற்போது பெண்களுக்கு மாதம் ரூ2,000 உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
மொத்தம் 40 பக்கங்களைக் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ரூ25 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்பதும் மற்றொரு முக்கிய வாக்குறுதி.
டெல்லியில் போராட்டம் நடத்தி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும்; பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதும் இதர முக்கியமான வாக்குறுதிகள். அதேபோல முதியார்- கைம்பெண்கள் உதவித் தொகை ரூ6,000 ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது காங்கிரஸ். ரூ500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவோம் எனவும் வாக்குறுதி அளித்திருக்கிறது காங்கிரஸ்.
அத்துடன் வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் அதிரடியான வாக்குறுதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications