For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து தேசம் பற்றி பேசிய கோவா துணை முதல்வர், அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் கோரிக்கை!

By Mathi
Google Oneindia Tamil News

Congress seeks dismissal of two Goa ministers who made Hindu nation remark
பனாஜி: இந்து தேசம் பற்றிய கோவா துணை முதல்வர் டிசோசா, அம்மாநில அமைச்சர் தீபக் தவலிகர் ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கோவாவில் ஆளும் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மகாரஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தீபக் தவலிகர். கோவாவின் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

சில நாட்களுக்கு தீபக் தவலிகர் 'இந்துராஷ்டிரம்' பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தவலிகர் கூறியது இதுதான்:

- நாம் அனைவருமே பிரதமர் மோடிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

- நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் அவர் இந்தியாவை ஒரு இந்துராஷ்டிராமாக்கிக் காட்டுவார்.

இது குறித்து கோவா துணை முதல்வர் டிசோசா கூறியது இது:

- இந்தியா என்பது இந்து தேசமாகத்தான் இருக்கிறது..

- இந்து தேசமாகவே இந்தியா இருக்கும்.

- இனிதான் இந்து தேசம் உருவாக்க வேண்டும் என்பதில்லை.

- இதுதான் இந்துஸ்தான். நான் உட்பட அனைத்து இந்தியர்களும் இந்துக்களே..

- நான் ஒரு கிறிஸ்தவ இந்து

தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபெம்டுத்துள்ளது. இருவரையும் உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில தலைவர் ஜான் பெர்னாண்டஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜான் பெர்னாண்டஸ் கூறியது இது:

- அரசியல் சாசனத்திற்கு எதிராக இருவரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

- சட்டவிரோத இந்த பேச்சுகள் குறித்து மாநில ஆளுநரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்.

- அரசியல் சாசனத்துக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வரும் இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு ஜான் பெர்னாண்டஸ் கூறினார்.

English summary
The Congress on Saturday demanded the dismissal of Goa cabinet minister Deepak Dhavalikar and Deputy Chief Minister Francis D'Souza for making "unconstitutional" remarks about India as a Hindu nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X