திடீர் உடல்நலக்குறைவு.. காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதல்வராக இருந்தவர் அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. பாஜக வென்று ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் அசோக் கெலாட்டுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அசோக் கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்த நிலையில் அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications