நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்.. காங்கிரஸ் போட்ட முட்டுக் கட்டை!
டெல்லி: மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவுக்கு ராஜ்ய சபையில் முதல் முட்டுக்கட்டையைப் போட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்த சட்டம் தொடர்பான கேள்வி நேரத்தையே ரத்து செய்யுமாறு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.
நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டம் உள்பட 6 அவசர சட்டங்களை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பிறப்பித்தது. மேலும் இந்த அவசரச் சட்டங்களை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து, சட்டமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சி, பாராளுமன்றத்தில் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் பிரச்சினையாக இந்த அவசரச் சட்டத்தை விவாதிக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி ராஜ்ய சபையில் இன்று கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீசு வழங்கி உள்ளது.
சபை விதி 267-ன் கீழ் இந்த நோட்டீசை வழங்கிய மேல்-சபை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, இந்த விவகாரத்தில் கட்சி இனியும் மவுனமாக இருக்காது என கூறினார்.
இந்த அவசரச் சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்று கூறிய அவர், தேவையற்ற கையகப்படுத்துதலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை இச்சட்டம் நீக்கிவிடும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ள கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, எனினும் இன்சூரன்ஸ் அவசர சட்டத்துக்கு எதிராக இத்தகைய எதிர்ப்பை காட்டமாட்டோம் என்று கூறினார்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், இந்த சட்டத்தின் உள்நோக்கம் குறித்து கடுமையான விவாதங்கள் கிளம்பும் எனத் தெரிகிறது.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications