உதய்பூர் டெய்லர் கொலையில் “பாஜக”வுக்கு தொடர்பா? விடாமல் விரட்டும் காங்கிரஸ்.. என்ஐஏக்கு பறந்த கடிதம்
ஜெய்பூர்: உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பிருப்பது அம்பலமான நிலையில், அதன் தொடர்ச்சியாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி பாஜகவின் ஐடி விங் பொறுப்பில் இருந்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என ராஜஸ்தான் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
Recommended Video
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறி ராஜஸ்தானின் உதய்பூரில் கண்ணையா லால் என்ற தையல் கலைஞர் 2 பேரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவையே அதிர வைத்த அந்த கொடூர செயலை செய்த இருவரும் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி கையில் கத்தியுடன் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு மிரட்டும் தொனியில் பேசினர்.

பாஜகவுடன் தொடர்பு
அவர்கள் இருவரையும் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே இருவரில் ரியாஸ் அட்டாரிக் என்ற நபர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிய புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. சம்பந்தப்பட்ட நபர் பாஜகவின் சிறுபான்மை அணியில் சேர விரும்பியதை அக்கட்சியின் நிர்வாகியே தனியார் ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்த வீடியோவும் நேற்று வெளியானது.

காஷ்மீர் பயங்கரவாதி
கொலையாளி ரியாஸ் அட்டாரிக்கு பாஜக தலைவர் ஒருவர் கழுத்தில் பாஜக கட்சித்துண்டு அணிவித்த புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. பலரும் இவற்றை பகிர்ந்து பாஜகவை விமர்சித்து வந்தனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவரை துக்சா கிராம மக்கள் பிடித்து நேற்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.

பாஜகவில் பயங்கரவாதி
கைது செய்யப்பட்ட பைசல் அஹமது மற்றும் தலிப் ஹுசைன் ஆகிய இருவரில் தலிப் ஹுசைன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி என்பது தெரிய வந்திருக்கிறது. ரஜோரி பகுதியை சேர்ந்த தலிப் ஹுசைன், பாஜகவில் இணைந்து மூத்த தலைவர்கள் பலருடன் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஊடக அணி பொறுப்பாளராக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

அமித்ஷாவுடன் புகைப்படம்
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ராமன் பல்லா கூறுகையில், "பாஜகவுக்கும் ஹுசைனுக்கும் இடையிலான தொடர்பையும், அதன் மூலம் அவர் செய்த காரியங்களையும் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். கட்சியில் பயங்கரவாதிகள் இருந்தது குறித்து பாஜக விளக்கவேண்டும். பயங்கரவாதி ஹுசைன் அமித்ஷாவுடன் நிற்கும் புகைப்படமும் உள்ளது. உள்துறை அமைச்சர் ஏன் அமைதியாக இருக்கிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விடாமல் விரட்டும் காங்கிரஸ்
பயங்கரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் நாட்டை ஆளும் பாஜகவில் பொறுப்புகளில் இருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கப்போவதாகவும் கூறி தேர்தலில் பிரச்சாரம் செய்து வந்த பாஜகவிலேயே பயங்கரவாதிகள் அங்கம் வைத்திருப்பதை தேசிய அளவில் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்க காங்கிரஸ் தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.

காங்கிரஸ் போராட்டம்
இந்த நிலையில் பயங்கரவாதி பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் ஹுசைன் ஆகியோரது புகைப்படங்களை பதாகைகளாக ஏந்தி நின்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரவிந்தர் ஷர்மா கூறுகையில் "பாஜக தலைவர்களுக்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹுசைனுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும்." என்றார்.

என்.ஐ.ஏவுக்கு கடிதம்
அதன் தொடர்ச்சியாக இந்த 2 விவகாரங்கள் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டொடஸ்ரா தேசிய புலனாய்வு முகமைக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது தொடர்பாக ஜெய்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரியாஸ் அட்டாரி பாஜகவின் உறுப்பினர். இந்த வகை அரசியலைதான் பாஜக நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. பாஜக மீது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications