காங் - பாஜகவுக்கு தலா 34 எம்எல்ஏக்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி யாருக்கு? இமாச்சலில் ட்விஸ்ட்
சிம்லா: இமாச்சல பிரதேச ராஜ்யசபா தேர்தலில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்தனர். 9 பேரும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதால் காங்கிரஸ்-பாஜகவுக்கு தலா 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இந்த வேளையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் யார் வெல்வார்கள்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு கடந்த 2022 ம் ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆட்சியில் இருந்த பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது.
இதற்கிடையே 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் சட்டசபையில் 43 என அதிகரித்தது. காங்கிரஸ் சார்பில் புதிய முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு பதவியேற்றார். இந்நிலையில் தான் அங்கு ராஜ்யசபா தேர்தல் நடந்தது. இமாச்சல பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், பாஜக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
காங்கிரஸ் சார்பில் அபிசேக் மான்வி சிங்கி, பாஜக சார்பில் ஹர்ஸ் மகாஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் 35 எம்எல்ஏக்கள் ஓட்டளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் காங்கிரஸின் அபிசேக் மான்வி சிங்கி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய தேர்தலில் ட்விஸ்ட் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதனால் பெரும்பான்மை இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அபிசேக் மான்வி சிங்கி தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் ஹர்ஸ் மகாஜன் வெற்றி பெற்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள், காங்கிரசுக்கு ஆதரவாக உள்ள 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 பேர் பாஜகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாளர்களாக மாற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பாஜகவின் ஆதரவாளர்களாக மாறும்போது இமாச்சல் சட்டசபையில் பாஜகவின் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை என்பது 25+6+3 = 34 என அதிகரிக்கும். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் 34 என்ற அளவுக்கு வரும். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 34 என ஒரே இலக்கத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சியின் ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள நிலையில் பதவி சுக்வீந்தர் சிங்கிற்கு சென்றது. இத்தகைய சூழலில் தான் விக்ரமாதித்ய சிங் தனது ஆதரவு எம்பிக்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தரப்பு பாஜக பக்கம் சாய்ந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதி. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி ஒரு திட்டமிட்டுள்ளது. அதாவது விரைவில் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கோர முடிவு செய்துள்ளது. இத்தகைய சூழலில் தான் இமாச்சல பிரதேச சட்டசபை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் கோஷமிட்டது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் 15 பேரை சபாநாயகர் அதிரடியாக இன்று காலையில் வெளியேற்றினார். இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ஜெய்ராம் தாக்கூர், விபின் சிங் பர்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர் உள்பட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தவறு செய்துள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அதாவது பொதுவாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கணக்கில் எடுத்து கொள்ளப்படுவார்கள். அப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க 35 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். அதேபால் பாஜகவின் 25 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சைகள் என மொத்தம் 34 எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது பாஜகவுக்கு இருக்கும். இதனால் காங்கிரஸ் கட்சி சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
மாறாக இன்று சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டு இருந்தால் பாஜகவின் 15 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபைக்கு வர முடியாது. இதனால் இமாச்சல் சட்டசபையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 68ல் இருந்து 53 என்ற அளவில் குறையும். அப்படி என்றால் பெரும்பான்மையை நிரூபிக்க 27 எம்எல்ஏக்கள் போதும். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 34 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்து காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். மாறாக 15 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையால் பாஜக மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக மாறிய காங்கிரஸின் 6 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகளை சேர்த்து அந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 19 என்ற அளவில் மட்டுமே இருக்கும்.
ஆனால் தற்போதைய சூழலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் பாஜகவின் எம்எல்ஏக்கள் அந்த மாநில ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். இதனால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தப்புமா? இல்லையா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications