மாநில கட்சியின் துணையுடனே தேசிய கட்சியை வீழ்த்த முடியும்... கர்நாடகத்தில் அரசியல் பாடம் கற்ற காங்
மாநில கட்சியின் துணையுடன் மட்டுமே தேசிய கட்சியை வீழ்த்த முடியும் என்று கர்நாடக தேர்தல் மூலம் காங்கிரஸ் பாடம் கற்றது.
Recommended Video

பெங்களூர்: மாநில கட்சியின் துணையுடன் மட்டுமே தேசிய கட்சியான பாஜகவை வீழ்த்த முடியும் என்று கர்நாடகா தேர்தல் மூலம் காங்கிரஸ் பாடம் கற்றது.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாக பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டது.
தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரக் கோரி காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் கடுமையாக போராடினர். உச்சநீதிமன்றத்தையும் நாடினர்.

ராஜினாமா
104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக தனக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்று எடியூரப்பா கூறிவிட்டார்.

பாஜகவை தோற்கடித்தது
இதன் மூலம் பாஜக ஆட்சி வருவதை தடுக்க முயற்சித்த காங்கிரஸ் தங்களது முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டதாகவே கருதுகிறது. மேலும் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது.

மற்ற மாநிலங்கள் போல் இல்லை
இந்நிலையில் மேகாலயா, கோவா போல் இல்லாமல் சட்டரீதியாக பாஜகவை காங்கிரஸ் எதிர்கொண்டதாகவே கருதப்படுகிறது. தென் மாநிலங்களில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்ட பாஜக தற்போது அவமானம் அடைந்துள்ளதாக காங்கிரஸார் கருத்து தெரிவிக்கின்றனர்.

அரசியல் பாடம்
இந்த தேர்தல் மூலம் காங்கிரஸ் ஒரு பாடத்தையும் கற்றுக் கொண்டுள்ளது. அதாவது ஒரு மாநிலத்தில் தேசிய கட்சியை வெற்றி கொள்ள மாநில கட்சியுடன் இணைந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதை நிரூபித்துவிட்டது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications