அமேதியில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மோதல்
அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு இடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது.
இதில் குறிப்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, அவரது அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளில் ஆம் ஆத்மி கட்சியினர் இறங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக அமேதியில் வரும் 12-ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் குமார் விஸ்வாஸ் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் திங்களன்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களை அடித்து உதைத்துள்ளனர். அப்போது உள்ளூர் பொதுமக்கள் வந்து பாதுகாத்துள்ளனர். எனவே யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ராகுல்காந்திக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் தொண்டர்களை அச்சுறுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் அடித்து காயப்படுத்தியாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications