Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1000 கோடி கன்ஃபார்ம்..பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பும் கூலி! குதுகலிக்கும் சேட்டன்ஸ்.. கேரளாவில் மாஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கூலி coolie படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் செண்டை மேளதாளத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில், ரஜினிகாந்த் உடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் படத்தில் முதன் முதலாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.

படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் டீசர், டைட்டில் கார்டு, மற்றும் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கூலி திரைப்படம் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகியுள்ளது.

Coolie Box Office

கூலி படம்

வழக்கமாக ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள திரையரங்குகளின் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடி கொண்டாட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ்

பட்டாசு வெடித்து கேக் வெட்டி கூலி படத்தை வரவேற்று வருகின்றனர். படத்துக்கான பாசிட்டிவ் ரிவ்யூகள் வெளிவர தொடங்கி இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர். கடைசியாக வெளியான ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில் ஒரு பெரிய வெற்றி ரஜினிகாந்துக்கு தேவைப்பட்டது. அதனை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

கூலி Coolie Box Office

உலகம் முழுவதும் பெறும் வரவேற்பை கூலி படம் பெற்றிருக்கும் நிலையில் , கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியானதையொட்டி செண்டை மேளதாளத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் அதிகாலை 6 மணி முதல் சிறப்பு காட்சிகள் வெளியாகியது. பாலக்காட்டில் மட்டும் 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தினசரி ஆறு காட்சிகள் வெளியிட கேரளா அரசு அனுமதி வழங்கி உள்ளது.

முன்பதிவில் சாதனை

கேரளாவில் 'கூலி' படத்தின் டிக்கெட் முன்பதிவு மட்டும் சுமார் ரூ.4.11 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் 'எம்புரான்' மற்றும் 'லியோ' ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தில் டிக்கெட் முன்பதிவில் கூலி படம் இடம்பெற்றுள்ளது. 'சிவாஜி, எந்திரன்' போன்ற படங்களுக்கு பிறகு கேரளாவில் ரஜினி படங்களுக்கு டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெறுவது கூலி படத்திற்கு தான் நிகழ்ந்துள்ளது என விநியோகஸ்தர் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

ரஜினிகாந்த் கூலி படத்தின் விமர்சனம்

செளபின் சாகிர் மலையாளத்தில் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். மஞ்சுமெல் பாய்ஸ். படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பூஜா ஹெக்டோவோடு "மோனிகா" பாடலுக்கு நடனமாடி அசத்தியது கேரளாவில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காட்டிலுள்ள பிரியா திரையரங்கில் அதிகாலை 4 மணி முதலே காத்திருந்த ரசிகர்கள், தியேட்டர் கேட்டை எட்டிக்குதித்தும், திரையரங்கை நோக்கி, கூலிப்படத்தை பார்க்க வேகமாக ஓடிய காட்சிகள், ரஜினி என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிதர்சனப்படுத்தியது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள கூலி படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+