கொச்சி: கொரோனா பாதித்த ஒருவருக்காக 289 பயணிகளையும் கூண்டோடு இறக்கிவிட்ட துபாய் விமானம்
கொச்சி: துபாய் புறப்பட்ட விமானத்தில் ஒரு இங்கிலாந்து பயணிக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்த நிலையில் அதில் பயணம் செய்த 289 பயணிகளுமே இறக்கிவிடப்பட்ட சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கேரளாவில் அதிக அளவில் கொரோனா தாக்கம் இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கொச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 290 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட விமானம் தயாராக இருந்தது.
விமானம் புறப்படும் நிலையில் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டு அத்தனை பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இங்கிலாந்தில் இருந்து 19 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் கேரளா வருகை தந்தனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே துபாய்க்கு 19 பேரும் புறப்பட்டனர்.
இதற்காக இன்று காலை துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பேரில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. அவரை பல இடங்களில் தேடி வந்தனர். பின்னர் அவர் துபாய் புறப்ப்படும் விமானத்தில் இருப்பது தெரியவந்தது.
இதனால் விமானம் புறப்படும்போது தடுத்து நிறுத்தப்பட்டது. முதலில் 19 பேரை மட்டும் இறக்கிவிட நினைத்த விமான நிலைய அதிகாரிகள், பின்னர் ஒட்டுமொத்தமாக 289 பேரையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர். பின் அனைவருக்குமே கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன என்றனர். இதனால் கொச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications