For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா: ஒட்டுமொத்த ராஜஸ்தான் மாநிலமும் இன்று முதல் மார்ச் 31 வரை சீல் வைக்கப்படும்- அசோக் கெலாட்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் வகையில் ஒட்டுமொத்த ராஜஸ்தான் மாநிலமும் இன்று முதல் வரும் 31-ந் தேதி வரை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 333 ஆக அதிகரித்துள்ளது.

Coronavirus: Ashok Gehlot announces lockdown in Rajasthan

கொரோனா தாக்குதலைத் தடுக்கும் வகையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து நகரங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்கள் முக்கிய மாவட்டங்கள், நகரங்கலை சீல் வைப்பதாக அறிவித்துள்ளன. இந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலமும் இன்று முதல் மார்ச் 31 வரை சீல் வைப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில் ,அத்தியாவசிய சேவைகள் தவிர இதர அனைத்தும் மார்ச் 31-ந் தேதி வரை மூடப்படும் என அறிவித்திருக்கிறார்.

English summary
Rajasthan CM Ashok Gehlot announced lockdown in Rajasthan from Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X