For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிபுரா: மற்றொரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாமிலும் கொரோனா- பாதிப்பு 88 ஆக அதிகரிப்பு

Google Oneindia Tamil News

அகர்தலா: திரிபுராவில் மற்றொரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாமிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திரிபுராவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.

திரிபுராவில் 138-வது பட்டாலியனைச் சேர்ந்த பி.எஸ்.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதலில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது 86-வது பட்டாலியன் வீரர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

Coronavirus hits another BSF battalion in Tripura- cases rise to 88

அஸ்ஸாம்- அகர்தலா தேசிய நெடுஞ்சாலையில் அம்பாசாவில் இந்த 86-வது பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து கொரோனா தொற்று பரவியது. தற்போது 2 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 86 பேர் திரிபுராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள்தான் கொரோனாவால் மிக குறைவான அளவு பாதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் திரிபுராவில் திடீரென கொரோன பாதிப்பு அதிகரித்திருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 77 ஆயிரத்தை நெருங்குகிறது- ரஷ்யாவிலும் அதிக பாதிப்பு அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 77 ஆயிரத்தை நெருங்குகிறது- ரஷ்யாவிலும் அதிக பாதிப்பு

ஏற்கனவே சி.பி.ஆர்.பி.எப். வீரர்கள் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tripura Chief Minister Biplab Kumar Deb said that coronavirus cases climbed to 88 in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X