கொரோனா.. வேலை இழந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் ஒடிசா அரசு.. ரூ.100 கோடி ஒதுக்கிய நவீன் பட்நாயக்!
கொரோனா காரணமாக வேலை இழந்த ஏழ்மையான நகர மக்கள் பயன்பெறும் வகையில் ஒடிசா மாநில அரசு நகர ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.
புவனேஷ்வர்: கொரோனா காரணமாக வேலை இழந்த ஏழ்மையான நகர மக்கள் பயன்பெறும் வகையில் ஒடிசா மாநில அரசு நகர ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.
ஒடிசாவில் மொத்தம் 60 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஒடிசாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அங்கு 21 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரே ஒருவர்தான் அங்கு பலியாகி உள்ளார். மீதம் இருக்கும் 38 பேர் நல்ல உடல் நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கொரோனா காரணமாக வேலை இழந்த ஏழ்மையான நகர மக்கள் பயன்பெறும் வகையில் ஒடிசா மாநில அரசு நகர ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் ஒடிசாவில் 144 நகரங்களில் உள்ள மக்கள் வேலை பெறுவார்கள். அதேபோல் இவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிலேயே பணம் செலுத்தப்படும்.
முக்கியமாக வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இந்த உதவி செய்யப்படும். மிஷன் சக்தி குழுவின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாத மாதம் பயனாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
நகர ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த திட்டம் மிக துரிதமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தினக்கூலிகள், ஏழ்மையான மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் மூலம் தண்ணீர் பாசன பகுதிகள் தூர் வாரப்படும், பார்க்குகள் மேம்படுத்தப்படும், விளையாட்டு அரங்குகள் சரி செய்யப்படும், மரங்கள் நடப்படும், பொது கழிப்பிடங்கள் உருவாக்கப்படும், சுத்தம் செய்யப்படும்.
Recommended Video
இந்த பணிகள் வேலையின்றி இருக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களுக்கு அளிக்கப்படும். சரியான சமூக இடைவெளியை கடைப்பிடித்து இந்த பணிகள் கடைபிடிக்கப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications